மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள்; திருப்பூர் விவசாயிகள் கோரிக்கை

மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள்; திருப்பூர் விவசாயிகள் கோரிக்கை
X

Tirupur News,Tirupur News Today- சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tirupur News,Tirupur News Today- கடந்த சில வாரங்களில், தக்காளியைத் தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. காய்கறிகளின் விலை சரிவால் நிலை குலைந்திருந்த விவசாயிகளுக்கு இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200ரூபாயை கடந்த நிலையில், சின்ன வெங்காய சாகுபடியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடி அதிகமாக இருந்து வருகிறது.

அதேவேளையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் போது விதைக்காகவே பெருமளவு செலவு செய்யும் நிலை உள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே மானிய விலையில் விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது,

தமிழக மக்களின் உணவில் சின்ன வெங்காயத்துக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. சின்ன வெங்காயம் இல்லாத சமையலறையில் மணக்க மணக்க, சுவை மிகுந்த உணவுகளை சமைப்பது சாத்தியமில்லை என்றே சொல்லலாம். எனவே வெங்காயத்துக்கு சமையலறையில் முக்கிய இடம் உண்டு. இதனால் ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் என்பதால், போதிய விலை கிடைக்காத போது விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். இதனால் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் தயக்கம் காட்டியதும், பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்ட பயிர் சேதமுமே தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

சின்ன வெங்காய சாகுபடியைப் பொறுத்தவரை வெங்காய விதை மற்றும் விதை வெங்காயம் என 2 விதமான நடவு முறைகள் பின்பற்றப்படுகின்றன. விதை மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு இரண்டரை முதல் மூன்று கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும்.விதை வெங்காயம் மூலம் நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படும்.

முன்னதாக ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ. 30 முதல் 50 வரை விலை கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 180 வரை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 3 மடங்கு விலை உயர்வால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. ஏற்கனவே உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளதும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே தோட்டக்கலைத்துறை மூலம் அரசு மானிய விலையில் வெங்காய விதைகள் மற்றும் விதை வெங்காயம் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Tags

Next Story