திருப்பூர்; நிப்ட்-டீ கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் விரைவில் துவக்கம்
Tirupur News- திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் விரைவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் இன்ஸ்டிடியூட்டில் அரசுத் திட்டத்தில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோா் பயன்பெறும் வகையில், இரண்டு மாத கால தையல் மற்றும் பேட்டன் மேக்கிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித் தகுதியும், 18 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கான பாடப் புத்தகம், சீருடை செலவினங்கள் முற்றிலும் இலவசம். அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் குறித்தும் பயிற்சியின் போது விளக்கப்படும்.
பட்டியல் இனத்தவா், பழங்குடி இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 80728 31041, 99940 84998 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என நிப்ட்-டீ கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu