சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர், பனியன் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர், பனியன் தொழிலாளி கைது
X

திருப்பூரில் ‘போக்சோ’ சட்டத்தில் இருவர் கைது.

Sexual Harassment Act - திருப்பூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பனியன் தொழிலாளி மற்றும் சிறுமியை பாலியல் தொல்லை செய்த போலீஸ்காரரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Sexual Harassment Act -திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி, கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். சிறுமிக்கு வயிற்றுவலி இருந்துள்ளது பெற்றோரிடம் கூற, மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோது ஏழு மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லை கீழபுதூரை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 25), திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். மாரிசெல்வமும், அந்த சிறுமியும் கடந்த 4 ஆண்டுகளாக பழகியுள்ளனர். இந்தநிலையில் கடந்த ஏழு மாதத்துக்கு முன், திருமணம் செய்வதாக கூறி, மாரிசெல்வம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த யுவராஜா (36) என்பவரும், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. யுவராஜா திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில், போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவுபடி, உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வம், யுவராஜா ஆகிய இரண்டு பேரையும் வடக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தார். 'போக்சோ' வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டது, திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story