போதைப்பொருள், கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

போதைப்பொருள், கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம்; அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
X

Tirupur News,Tirupur News Today- கலெக்டர் தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today-திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

Tirupur News,Tirupur News Today - தமிழ்நாடு அரசு போதைபொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான துறை சார்ந்தஅலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம், திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

ஆய்வுக்கூட்டத்துக்கு தலைமை வகித்த கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது,

திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக புகார்கள் வரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வுமையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுமதியற்ற மதுபானகூடங்கள் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

வருகின்ற ஜூன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அதிக மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட்கள், ரயில்வே ஸ்டேசன், காய்கறிச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள், ஸ்டிக்கர், நோட்டீஸ் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடையும் வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.காவல்துறை, கலால்துறை இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபானக்கூடங்கள் மற்றும் போதைபொருள் இல்லாத நிலைக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர காவல் உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ஈஸ்வரன்,உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார், வடிப்பக அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!