நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்கள் விவரம் சேகரித்து அனுப்ப, பள்ளிகளுக்கு உத்தரவு

நீண்ட விடுப்பில் உள்ள மாணவர்கள் விவரம் சேகரித்து அனுப்ப, பள்ளிகளுக்கு உத்தரவு
X

Tirupur News,Tirupur News Today- நீண்ட விடுப்பில் உள்ள மாணவர் விவரம் சேகரிக்க உத்தரவு (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today-பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ள மாணவர்கள் குறித்து, விவரம் சேகரித்து அனுப்ப, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- பள்ளிகளில் 15 நாட்களுக்கு மேல் விடுப்பில் உள்ளவர்களை இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளவர்களாக கருதி பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில், இடைநிற்றல் தழுவியோருக்கான சிறப்பு கணக்கெடுப்பு இம்மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.வழக்கமாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் 1 -ம்தேதி வரை நடத்த வேண்டும். இதற்கு பிறகும் பள்ளிகளில் சேராதவர்களை கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்திலும், இடைநிற்றல் இன்றி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்தவர்களின் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இடைநிற்றல் தழுவ வாய்ப்புள்ளதால் பள்ளி செல்லா குழந்தைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பு திட்டத்தின் வாயிலாக உரிய மாணவர்களின் வீட்டிற்கே சென்று பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொடர்ந்து பள்ளிக்கு வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூரை பொருத்த வரை, பனியன் தொழில் நிறுவனங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஒர்க்‌ஷாப்கள், ஓட்டல்கள், மளிகை, பேக்கரி கடைகள், சிறு தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இதனால், படிப்பில் விருப்பமில்லாத சிலர், வேலைக்கு சென்று விடுகின்றனர். பள்ளி செல்ல விரும்பாத குழந்தைகளும், குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் நிலையிலும் மாணவர்களின் படிப்பு தடைபடுகிறது. எனவே, குழந்தைகளின் கல்விநலன் பாதிக்காத வகையில், அதன் விவரங்களை சேகரித்து, அவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!