ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை; அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
Tirupur News,Tirupur News Today- ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு மற்றும் உணவுப் பொருள் துறை அமைச்சா் சக்கரபாணியிடம் வலியுறுத்தியதாக, உழவா் உழைப்பாளா் கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் நிருபர்களிடம் கூறியதாவது,
கொப்பரைக்கு உரிய விலை, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், கள் இறக்க அனுமதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். இது தொடா்பாக, டெல்லி சென்று மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் கைலாஷ் செளத்ரியை சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து திண்டுக்கல்லில் தமிழக அரசின் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணியை சந்தித்து மனு அளித்தோம்.
அப்போது அவா், சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய்க்கு மானியம் வழங்கி அரை லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.25க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தரும் ஆதரவின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறினாா். அமைச்சரின் இந்த பதில் தென்னை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது என்றாா்.
கட்சி சாா்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது,
விவசாயிகளுக்கான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக திருப்பூா் மாவட்டம் முழுவதும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறோம். இந்தப் போராட்டம் ஆகஸ்ட் 31 வரை தொடரும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில், அடுத்த மாதம் சட்டப் பேரவை முன் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும். இதற்கிடையே 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி கூறியுள்ளாா்.
அமைச்சரின் இந்த அறிவிப்பை வெறும் கண் துடைப்பாகவே கருதுகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக ரூ.30க்கு ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu