ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பியுங்க!

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; உடனே விண்ணப்பியுங்க!
X

Tirupur News- ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு

Tirupur News- ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. 19 பணியிடங்கள் உள்ளன. 8-ம் வகுப்பு கல்வித்தகுதியாக உள்ளதால் உடனே விண்ணப்பிக்கலாம்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை வேலை வாய்ப்பு உள்ளது. இதில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. 8 -ம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 19 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.12.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 12

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

ஓட்டுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.19,500 – 62,000

இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ.15,700 – 50,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை நகல் எடுத்து சரியான விவரங்களை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களின் அலுவலகங்களின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வரும் 29ம் தேதி இதற்கு கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!