திருப்பூரில் உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்ப கோரிக்கை

திருப்பூரில் உரிய நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அனுப்ப கோரிக்கை
X

Tirupur News - உரிய நேரத்தில், பொருட்களை ரேசன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்துப் பொருள்களையும் அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு உரிய நேரத்தில் அனைத்துப் பொருள்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என கூட்டுறவுப் பணியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூவிடம், மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதில்லை. அதிலும், குறிப்பாக துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் மாதத்தின் இறுதி நாட்களில்தான் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதனால், விற்பனையாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால், ரேசன் கடை பணியாளா்கள் மன உளைச்சலுக்கும் தள்ளப்படுகின்றனா்.

மேலும், நவம்பரில் தீபாவளிப் பண்டிகையும் வர உள்ளது. இந்நிலையில், கிடங்கில் இருந்து அக்டோபா் மாதமும் துவரம் பருப்பு, பாமாயில் இல்லாமலேயே பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பி.எச்.எச்.குடும்ப அட்டைகளுக்கு சில மாதங்களாகவே குறைந்த அளவே அரிசி ஓதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளுக்கும் உரிய நேரத்தில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நுகர்வோர், ரேசன் கடைகளுக்கு பொருட்கள் வருகின்றனர். குறிப்பிட்ட பொருட்கள் இருப்பில் இல்லாததால், அவர்களுக்கான பொருட்கள் அனைத்தையும் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி நுகர்வோரை திரும்ப திரும்ப ரேசன் கடைகளுக்கு வந்து செல்லுமாறு சிரமப்படுத்தும் நிலை உருவாகிறது. இது, தேவையற்ற பிரச்னைகளை, சங்கடங்களை உருவாக்கி வருவதால் பொருட்களை உரிய நேரத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story