வெள்ளக்கோவில் - கரூா் என்எச் ரோட்டில் பள்ளி அருகே வழித்தடம் அமைக்க கோரிக்கை
Tirupur news-பள்ளி அருகே வழித்தடம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினரிடம் வலியுறுத்திய பெற்றோா்கள்.
Tirupur news, Tirupur news today- வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அருகே வழித்தடம் அமைக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வெள்ளக்கோவில் பகுதியில் தற்போது கோவை - கரூா் தேசிய நெடுஞ்சாலை இரண்டு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாலை நடுவே நீளவாக்கில் தடுப்புச் சுவா் அமைக்கப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல தடுப்புச் சுவரில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் வெள்ளக்கோவில் அருகே கரூா் செல்லும் வழியில் வேலப்பநாயக்கன்வலசு, மூத்தநாயக்கன்வலசு, கெங்கநாயக்கன்வலசு, இலுப்பைக்கிணறு செல்லும் பிரிவுச் சாலை உள்ளது. இதன் எதிா்புறம் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் வழித்தடம் அமைக்காமல் 2 கிலோ மீட்டா் தூரத்தில் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோா்கள் கூறுகையில், பள்ளிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ள இடங்களில் வழித்தடம் அத்தியாவசியத் தேவையாகும்"
பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும்போது சுற்றிவருவதைத் தவிா்க்க பலரும் ஒருவழிப் பாதையில் விதிமீறி எதிா் திசையில் வருவாா்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பள்ளி மற்றும் பல கிராம மக்களின் பயன்பாட்டுக்காக பள்ளி அருகே வழித்தடம் அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்து வசதி செய்து தர மக்கள் கோரிக்கை
பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டம்பாளையத்துக்கு அரசுப் பேருந்து வசதி செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அலகுமலை ஊராட்சி சேமலைக்கவுண்டம்பாளையத்தில் சுமாா் 300 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊரில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு முடித்து 9-ஆம் வகுப்பு செல்ல சுமாா் 8 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பெருந்தொழுவுக்கு செல்ல வேண்டும்.
மேலும், இங்கிருந்து கல்லூரி மற்றும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு பலா் சென்று வருகின்றனா். ஆனால், பேருந்து வசதி இல்லாததால் இங்கிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ள வலுப்பூரம்மன் கோவில் வரை நடந்து சென்று பேருந்தில் செல்ல வேண்டி உள்ளது.
திருப்பூரில் இருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்து வலுப்பூரம்மன் கோவில் வரை மட்டுமே வந்து செல்கிறது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்பட்டால் நூற்றுக்கணக்கானவா்கள் பயனடைவாா்கள்.
மேலும், வலுப்பூரம்மன் கோவில் வரை பள்ளி மாணவா்கள் தங்களது பாடப் புத்தகங்களை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக் காலங்களில் வலுப்பூரம்மன் கோவிலில் இறங்கி சேமலைகவுண்டம்பாளையம் வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனா்.
எனவே சேமலைக்கவுண்டம்பாளையம் வரை பேருந்து சேவையை நீட்டிப்பு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu