தொடர் விடுமுறை: திருப்பூர் வழியாக செல்லும் சிறப்பு ரயில்களின் விவரம்

தொடர் விடுமுறை: திருப்பூர் வழியாக செல்லும் சிறப்பு ரயில்களின் விவரம்
X

பைல் படம்.

திருப்பூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்களின் விவரம் குறித்து காணலாம்.

மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவனந்தபுரம்- சென்னை எழும்பூர் ரயில்(வண்டி எண்: 06044) வருகிற 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரு தினங்கள், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:45 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- திருவனந்தபுரம் ரயில் (வண்டி எண்: 06043) வருகிற 6 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

எர்ணாகுளம்- சென்னை எழும்பூர் ரயில் (வண்டி எண்: 06046) வருகிற 9 மற்றும் 16-ந் தேதி, எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இரவு 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:05 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர்- எர்ணாகுளம் ரயில் (வண்டி எண்: 06045) வருகிற 10 மற்றும் 17ந்தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!