திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பரவலாக  மழை
X
திருப்பூர் நகரம், புற நகர்ப்பகுதிகளில் மீண்டும் மழை பெய்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் மழை பெய்தது. அதன் பின்னர், அவ்வப்போது லேசான சாரல் மழை இருந்தது. ஒரு சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், திருப்பூரில் இன்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பகல் வாக்கில், திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திருப்பூர் நகரம், புற நகர் பகுதிகளில் திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம், கணியாம்பூண்டி, புதுப்பாளையம், வஞ்சிபாளையம், மங்கலம் பகுதிகளில் மழை பெய்துள்ளது.

அதேபோல், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிறபகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. ஏற்கனவே தாராபுரம், உடுமலை பகுதிகளில், மழையின் காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!