திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை

திருப்பூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கனமழை
X

கோப்பு படம் 

திருப்பூர் நகரம், புறநகர் பகுதிகளில் இடியுடன் ஏறத்தாழ ஒருமணி நேரம் கனமழை பெய்தது. அவினாசி, உடுமலையிலும் மழை பெய்துள்ளது.

திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இன்று மாலை 7:15, மணியளவில் லேசான தூரலுடன் பெய்யத் தொடங்கிய மழை, நேரம் செல்லச்செல்ல வலுத்தது. பின்னர் இடி, மின்னலுடன் ஏறத்தாழ ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.
திருப்பூர் நகரில் திருமுருகன்பூண்டி, புஷ்பா தியேட்டர், காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டு பகுதிகளில் மழை நீடித்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் ஆறாக ஓடியது. வேலை முடித்து வீடு திரும்புவோர், மழையில் சிக்கிக் கொண்டு ஆங்காங்கே ஒதுங்கினர்.
இதேபோல், புறநகர் பகுதிகளான வேலம்பாளையம், கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், புதுப்பாளையம், மங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால், இருள் சூழ்ந்து காணப்பட்டது. பொங்கலூர், அவினாசி, உடுமலைப்பேட்டை, பல்லடம் உள்பட, திருப்பூர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், இதே நேரத்தில் மழை பெய்தது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!