திருப்பூரில் இடைவிடாது தொடரும் மழை:வெள்ள பாதிப்புக்கு உதவி எண்கள் இதோ

திருப்பூரில் இடைவிடாது தொடரும் மழை:வெள்ள பாதிப்புக்கு உதவி எண்கள் இதோ
X
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளுக்கு தொடர்பு கொள்ள, இதோ உதவி எண்கள் .

திருப்பூர் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலையில் இருந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர் நகரம், புற நகர் பகுதிகளில் கனமழை இன்னமும் பெய்து வருகிறது.
திருப்பூர் நகரில் காலேஜ் ரோடு, மங்கலம் ரோடு, அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், ஆண்டிபாளையம் உள்பட பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. மங்கலம், கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம், புதுப்பாளையம், வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோல், அவினாசி, பல்லடம் பகுதிளிலும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் ஓடுகிறது. திருப்பூர் நகரில் பணி முடித்து வீடு திரும்பும் பனியன் நிறுவனத் தொழிலாளர்கள், மழையால் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வாகன நெரிசலும் உண்டானது. மழை நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்பா? உதவி எண்கள்

திருப்பூரில் மழை பெய்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அதன்படி, மாவட்ட கட்டுப் பாட்டு அறையை, 1077, 0421 2971133,2971199 என்ற எண்களில், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், அனைத்து தாலுக்காக்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி 04296 273257, திருப்பூர் வடக்கு - 0421 2200553, திருப்பூர் தெற்கு 0421- 2250192, பல்லடம் - 04255 253118, ஊத்துக்குளி – 04294 280360, தாராபுரம் 04258 220399 , காங்கயம் - 04257 230689, மடத்துக்குளம் 04252 252588, உடுமலை 04252 223857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!