50 சதவீத மானியத்தில் தூயமல்லி நெல் விதைகள்; விவசாயிகளுக்கு அழைப்பு
Tirupur News-திருப்பூரில் 50 சதவீத மானியத்தில், தூயமல்லி நெல் விதைகள் வழங்க ஏற்பாடு (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் வேளாண்மைத் துறை சாா்பில் 50 சதவீத மானியத்தில் தூயமல்லி நெல் விதைகள் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும், விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூல பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை மற்றும் வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வெளிச் சந்தையில் இந்த ரக விதை ஒரு கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் கிலோ ரூ.25 க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை மானியத்தில் விதை நெல் வழங்கப்படும். எனவே, சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகங்களில் மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கி பயனடையலாம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu