திருப்பூா் மாவட்டம்; பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.5.61 லட்சம் மதிப்பில் காதொலிக் கருவிகள் வழங்கல்

திருப்பூா் மாவட்டம்;  பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.5.61 லட்சம் மதிப்பில் காதொலிக் கருவிகள் வழங்கல்
X

Tirupur News- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காதொலி கருவிகள் வழங்கப்பட்டது (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் ரூ.5.61 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை கலெக்டர் வழங்கினாா்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் 33 பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.5.61 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2,355 மாற்றுத்திறன் மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதில் 214 மாணவா்கள் செவித்திறன் குறைபாடு உடையவா்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதுபோன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு செவித்திறன் கேட்க முடியாத நிலையில், அவர்களது கல்வித்தரம் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘நம்ம ஸ்கூல்.. நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின்கீழ் இந்தியா தொண்டு நிறுவனம், வீ காா்டு நிறுவனம் இணைந்து 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 123 பள்ளிகளில் உள்ள மாணவா்களை பரிசோதித்து காதொலிக்கருவி தேவைப்படும் 60 மாணவா்களைக் கண்டறிந்து முதல் தவணையாக செவித்திறன் பாதிக்கப்பட்ட 33 மாணவா்களுக்கு தலா ரூ.17,000 வீதம் ரூ.5.61 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவிகளை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினாா். மீதமுள்ள மற்ற மாணவ, மாணவியருக்கும் அடுத்தடுத்த கட்டங்களில் காதொலி கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நா.கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!