மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஓ.இ.,மில்கள் உற்பத்தி நிறுத்தம் 30ம் தேதி வரை நீடிப்பு
Tirupur News- மங்கலம் ஓ.இ மில்கள் வேலை நிறுத்தம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க முடிவு (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today-ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சங்கமானது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை நூல் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.
அதன்படி திருப்பூர் மாவட்டம் மங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சாமளாபுரம், மங்கலம்,சோமனூர், பள்ளிபாளையம், பூமலூர், 63 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.,மில்கள் உற்பத்தி நிறுத்தத்தை துவங்கியுள்ளன.
இது குறித்து ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகையில், தமிழக அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓ.இ., மில் தொழிற்சாலை களின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு 1 யூனிட்டிற்கு 1 ரூ.53பைசா என மின் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த மின்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மின் கட்டண உயர்வினால் ஓ.இ., மில் தொழிற்சாலை நடத்த முடியாத நிலையில் உள்ளது. தீபாவளி பண்டிகை காலங்களில் ஓ.இ.மில்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி செல்ல ஆயத்தமாகி கொண்டுள்ளனர்.ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மின்கட்டண உயர்வை ரத்து செய்து ஓ.இ.மில்.தொழிற்சாலைகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ஓ.இ.மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில் அசோசியேசன் ( ஓஸ்மா) சங்கத்தலைவர் அருள்மொழி கூறுகையில், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்காததால் நாளொன்றுக்கு ரூ.10 கோடி மதிப்பில் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசுஉடனடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகமாக இருப்பதால் ஓ.இ.மில்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
காட்டன் வேஸ்ட் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தால் மட்டுமே ஓ.இ.மில்கள் நஷ்டமின்றி தொழில் செய்ய முடியும்.மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தம் செய்வதால் மார்க்கெட்டில் நூல் கொள்முதல் ஆவதில்லை. ஆகவே நிலைமை சீராகும் வரை வருகிற 30-ம் தேதி வரை ஓ.இ.மில்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu