திருப்பூரில் வரும் 25-ல் உற்பத்தி நிறுத்தப்போராட்டம்; அனைவரும் பங்கேற்க ‘சைமா’ வலியுறுத்தல்
Tirupur News- பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ம் தேதி, உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் சார்பாக, திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த், பல்லடம் கோவிந்தராஜூ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சைமா, நிட்மா, டீமா, டெக்பா, சிம்கா, நிட்டிங், காம்பாக்டிங், பிரண்டிங், எம்ப்ராய்டரி உள்ளிட்ட சார்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொழில் நிறுவனங்களுக்கு 430 சதவீதம் உயர்த்திய நிலை மின்கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். பீக்ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். 3பியில் இருந்து 3 ஏ1 நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மல்டி இயர் டேரிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வை தவிர்க்க கோரியும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யக்கோரியும் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 25-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தொழில் அமைப்பின் சார்பில் செய்யப்பட உள்ளது.
இதையொட்டி துண்டுபிரசுரங்கள், பேனர்கள், விளம்பர பலகைகள் அமைத்து வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அனைத்து சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்துக்கு வணிகர்கள், ஓட்டல் சங்க உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 2000 பவர்டேபிள் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
‘சைமா’ சங்கம் வலியுறுத்தல்
பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ம் தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்க சைமா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பீக் ஹவா்ஸ் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயா்வை தவிா்க்க கோரி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் 25 -ம் தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று சைமா சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருநாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu