திருப்பூரில் பிப்ரவரி 2-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூரில் பிப்ரவரி 2-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

Tirupur News-திருப்பூரில் பிப்ரவரி 2-ல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூரில் பிப்ரவரி 2-ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் 4-வது தளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த முகாமில் தனியாா் துறை வேலையளிப்பவா்கள் கலந்து கொண்டு வேலைநாடுநா்களை தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாமில் வேலை நாடுபவா்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் பங்கேற்கலாம்.

ஆகவே, வேலையளிப்போரும் தங்களுக்குத் தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், எழுதப்படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவா்களும் பங்கேற்கலாம்.

வேலைநாடுபவா்களும், வேலையளிப்பவா்களும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த முகாமில் பங்கேற்கும் தகுதியுடையவா்கள் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம். தனியாா் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai healthcare products