திருப்பூரில் வரும் 9ம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
Tirupur News- திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 9ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 9-ம் தேதி காலை 8 மணி முதல் 4 மாலை மணி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிா் திட்ட அலுவலகம் சாா்பில் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 9-ம் தேதி காலை 8 மணி முதல் 4 மாலை மணி வரை நடைபெறுகிறது.
இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இதில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 , டிப்ளமோ, டிகிரி, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயின்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல் கற்றவா்கள் என அனைத்துவித தகுதியாளா்களும் கலந்து கொள்ளலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.
முகாமில் பங்கேற்க இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421-299152 அல்லது 9499055944 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu