திருப்பூரில் வரும் 17ம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்; பங்கேற்க அழைப்பு

Tirupur News-திருப்பூரில் வரும் 17ம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியன சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 17 -ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் குமரன் கல்லூரியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், தனியாா் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் 10 ஆம் வகுப்பு, 12 -ம் வகுப்பு, ஐ.டி.ஐ.0, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பெற்றவா்கள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா்கள், தையல்பயிற்சி பெற்றவா்கள் என அனைத்து கல்வித் தகுதியாளா்களும் பங்கேற்கலாம்.
தனியாா் துறையில் வேலைபெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இது முற்றிலும் கட்டணமில்லா இலவச சேவையாகும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம். வேலை தேடும் இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இதில், பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu