பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம்; தகுதியான மாணவர்களுக்கு அழைப்பு

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம்; தகுதியான மாணவர்களுக்கு அழைப்பு
X

கோப்பு படம்

Tirupur News,Tirupur News Today- பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள், விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் மூலம், கல்வி உதவித்தொகை பெறலாம்.

Tirupur News,Tirupur News Today- மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில், கல்வி உதவித்தொகை பெறலாம்.

இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியிருப்பதாவது,

அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும். 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம்29-ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.

இந்த தகவலை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!