திருப்பூர்; சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கான சான்றிதழ் வழங்கல்
Tirupur News- சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
திருப்பூா் அனுப்பா்பாளையம் கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிறந்த மேலாண்மைப் பள்ளிக் குழுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் மாவட்ட அவிலான சிறந்த மேலாண்மைப் பள்ளிக் குழுக்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:
பள்ளியின் வளா்ச்சி, பள்ளியின் தரம், ஆசிரியா்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பாா்த்து அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துதல், பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாடநூல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்தல் உள்ளிட்டவை பள்ளி மேலாண்மைக் குழுக்களின் முக்கிய நோக்கங்களாகும்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்தும் 100 சதவீதம் தோ்ச்சி அடையும் பொறுப்பை மேலாண்மைக் குழுக்கள் எடுத்து முழு பங்களிப்பை செலுத்த முன் வரவேண்டும், என்றாா்.
முன்னதாக பெரியாயிபாளயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, எஸ்.காங்கயம் பாளையம், தாராபுரம், குடிமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், வி.எல்.என் பட்டிபுதூா், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், படியூா், காங்கயம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஆரத்தொழுவு, குண்டடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், சோழமாதேவி, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், கிளாங்குண்றல், மூலனூா், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளின் மேலாண்மைக் குழுக்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ந.கீதா, மாவட்ட கல்வி அலுவலா்கள் (இடைநிலை) பக்தவச்சலம், (தொடக்கக் கல்வி) தேவராஜன், (தொடக்கக் கல்வி) த.ஜெகதீசன் (தாராபுரம்), உதவி திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) த.அண்ணாமலை, கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் கீதாஞ்சலி கோவிந்தப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu