மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வில் பங்கேற்க ஆயத்த பயிற்சி
Tirupur News- மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கான ஆயத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிக்களுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை நடத்தி வருகிறது. மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசுகளான பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பபடிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, 18.11.2023 பிற்பகல் 5 மணிக்குள் ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 7வது தளம், மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டட வளாகம், பெருந்துறை ரோடு, ஈரோடு 638011, தொலைபேசி எண்: 0424-2221912 மின்னஞசல் முகவரி: adferode2@gmail.com என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஈரோடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu