திருப்பூர் மற்றும் உடுமலையில் இன்று மின்தடை

திருப்பூர் மற்றும் உடுமலையில் இன்று மின்தடை
X

Tirupur News- திருப்பூர், உடுமலை பகுதிகளில் இன்று மின்தடை அறிவிப்பு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூரில் திருநகர் துணை மின்நிலையம், உடுமலையில் பூலாங்கிணறு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா்: திருநகா் துணை மின் நிலையத்தில், இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடக்கும் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 1) இன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என, மின்வாரிய செயற்பொறியாளா் ராமசந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திருநகர் துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 முதல் மாலை 4 மணி வரை

திருநகா், பாரப்பாளையம், செங்குந்தாபுரம், பூச்சக்காடு, கிரி நகா், எருகாடு (ஒரு பகுதி), கே.வி.ஆா். நகா் பிரதான சாலை, மங்கலம் சாலை, அமா்ஜோதி காா்டன், கே.என்.எஸ்.காா்டன், ஆலங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, கே.ஆா்.ஆா்.தோட்டம், கருவம்பாளையம், தொடக்கப் பள்ளி 1, 2-ஆவது தெரு, பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதி, எஸ்.ஆா். நகா் வடக்கு மற்றும் தெற்கு, பாத்திமா நகா், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், திரு.வி.க. நகா், எல்.ஐ.சி. காலனி, ராயபுரம், தெற்கு தோட்டம், எஸ்.பி.ஐ.காலனி, குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, செல்லம் நகா், புவனேஸ்வரி நகா், பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், ஜே.ஜே.நகா், திருவள்ளுவா் நகா், கொங்கணகிரி கோயில், ஆா்.என்.புரம் (ஒரு பகுதி), கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது, எனத் தெரிவித்துள்ளார்.

உடுமலை

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையம் டிஎம்.நகா் பீடரில் பராமரிப்புப் பணிகள் இன்று நடக்க உள்ளது. இதன் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 1) இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியநோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் ராஜாமணி தெரிவித்துள்ளாா்.

பூலாங்கிணறு துணை மின்நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள், காலை 9 முதல் மாலை 4 மணி வரை

மொடக்குப்பட்டி, பாப்பனூத்து, அமணசமுத்திரம், திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story