உடுமலை, பல்லடம் பகுதிகளில் நாளை மின்தடை

உடுமலை, பல்லடம் பகுதிகளில் நாளை மின்தடை
X

Tirupur News,Tirupur News Today-உடுமலை, பல்லடம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடம் மற்றும் உடுமலை பகுதிகளில், பராமரிப்பு பணிகளுக்காக நாளை, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை 15-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. ஆகையால், கீழ்கண்ட கிராமங்களில் மின்சாரம் இருக்காது என, செயற்பொறியாளா் மூா்த்தி அறிவித்துள்ளாா்.

மின் தடை பகுதிகள்;

பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆா்.வேலூா், குறிச்சிக்கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

பல்லடம் ; மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை, மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

மின்தடை பகுதிகள்;

சேடபாளையம், 63.வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!