உடுமலை மற்றும் அவிநாசியில் நாளை (நவ. 2ம் தேதி) மின்தடை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் அவிநாசியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- உடுமலை துணை மின் நிலையத்தில் நாளை நடக்க உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் ராஜாமணி தெரிவித்துள்ளாா்.
உடுமலை துணை மின்நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்;காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆா்.வேலூா், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கா் நகா், காந்தி நகா்-2, சிந்து நகா், ஸ்ரீராம் நகா், ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில், மின்விநியோகம் இருக்காது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி
சேவூா் மற்றும் வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடக்க உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 2) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
சேவூா் துணை மின்நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின்நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்; காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu