திருப்பூரில் நாளை(16ம் தேதி), அவிநாசியில் நாளை மறுதினம் (17ம் தேதி) மின்தடை

Tirupur News-திருப்பூரில் நாளை, அவிநாசியில் நாளை மறுதினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படங்கள்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் துணை மின் நிலையத்தில் நடக்க உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை வியாழக்கிழமை (நவம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
திருப்பூா் துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கம், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுஸிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆா்.இ.லே-அவுட், எஸ்.ஆா்.நகா் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகா், டெலிபோன் காலனி, வித்யா நகா், எம்.ஜி.ஆா்.நகா், பாரதி நகா், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோ நகா், காமாட்சிபுரம், பூத்தாா் திரையரங்கு பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி திரையரங்கம் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி. திரையரங்கம் பகுதி, ஆசா் நகா், நாராயணசாமி நகா், காந்தி நகா், டிடிபி மில் (ஒரு பகுதி), சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலன் நகா் ஆகிய பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.
அவிநாசி: கருவலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடக்க உள்ள மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (நவம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கருவலூா் துணை மின் நிலையம்
மின்தடை ஏற்படும் பகுதிகள்:காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu