திருப்பூர், பல்லடம் பகுதிகளில் நாளை (17ல்) மின்தடை

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் நாளை (17ல்) மின்தடை
X

Tirupur News,Tirupur News Today- மின் பராமரிப்பு பணிகளுக்காக, திருப்பூர், பல்லடம் பகுதிகளில் நாளை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் குமார் நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலக பகுதி மற்றும் பல்லடம் துணை மின்நிலையங்களில் நாளை (17ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் குமார்நகர், சந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்லடம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (சனிக்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

குமார் நகர் துணை மின் நிலையம்- மின்தடை பகுதிகள் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர, டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்து நகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ்காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சந்தைபேட்டை துணை மின்நிலையம் - மின்தடை பகுதிகள்(காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப்காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம்ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன்மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்ங்காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பலவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின்ரோடு, தாராபுரம்ரோடு, கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது,

கலெக்டர் அலுவலக துணை மின் நிலையம் - மின்தடை பகுதிகள் (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

பூம்புகார், இந்திராநகர், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதி நகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள், கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், தோட்டம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பல்லடம் துணை மின் நிலையம் - மின்தடை பகுதிகள் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என, பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!