திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம் விசைத்தறியாளர்கள்

திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும்: பல்லடம்  விசைத்தறியாளர்கள்
X
‘கூலி உயர்வு அமல்படுத்த வலியுறுத்தி, வரும், 9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும்’ என, விசைத்தறி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பல்லடத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் வேலுசாமி கூறியதாவது: ஜி.எஸ்.டி.க்கு எதிராக குரல் கொடுத்ததைப் போன்று, நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் பஞ்சு, நுால் விலை உயர்வை முன்னெடுத்து போராட்டம் நடத்த வேண்டும். பலகட்ட பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்படாததே இதுபோன்ற நிலை ஏற்பட காரணமாகிவிட்டது.

பெட்ரோல், காஸ், பஞ்சு, நுால் விலை அனைத்தும் உயர்ந்துள்ளது. சைசிங் கூலி இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது: இருந்தும், நெசவு கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை. ஏழு ஆண்டாக, கூலி உயர்வை அமல்படுத்தாததை கண்டித்து, ஜன.,9ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!