மழைக்கால மின் விபத்துகளை பொதுமக்கள் தவிர்க்க மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல்
Tirupur News- மின் விபத்துகளை தவிர்க்க, மின்வாரியம் அறிவுறுத்தல் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியும், நீர்நிலைகளின் குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடியும் சென்ற வண்ணம் உள்ளது. மேலும் இந்த மழையினால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மழை காலத்தில் வீடுகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கம் இப்படி அனைத்து கட்டிடங்களிலும் மழைநீரின் ஈரத்தன்மை காணப்படுகிறது.
மேலும் வெயில் இல்லாததால் இந்த ஈரத்தன்மை மாற சில நாட்கள் ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் மின்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வழக்கம்போல் வீட்டில் உள்ள சுவிட்சு போடுகளை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த சுவிட்சு பாக்ஸ் அருகில் ஈரப்பதம் உள்ளதா? மேலும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற இடங்களில் மின் கசிவு உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே சுவிட்சுகளை ஆன் செய்ய வேண்டும்.
தற்போது உள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சப்பல் அணிந்து மின்சாரத்தை பயன்படுத்துவது நல்லது. இதேபால் வீட்டில் மழைநீர் வடியும் இடத்தில் மின் கசிவு உள்ளதா? என்றும் கவனிக்க வேண்டும். அப்படி மின் கசிவு இருந்தால் மெயின்பாக்ஸ் சுவிட்சை ஆப் செய்து விட்டு மின் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி பல பேர் உயிரிழந்து வருகிறார்கள். ஆகவே மேலும் உயிர்பலியும் எதுவும் நடக்காமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூர் பகிர்மான வட்ட அதிகாரிகள் கூறியதாவது,
தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.
மின் கம்பத்தில் ஏதாவது மின் வயர் அறுந்து கிடந்தால் உடனே மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதேபோல் வீட்டில் உள்ள மின் விநியோகத்தில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார்கள் இவைகளின் செயல்பாடுகளை நன்கு கவனிக்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்புகளில் ஏதாவது கசிவு உள்ளதா? அல்லது மின் பாக்ஸில் ஈரத்தன்மை உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே மின் சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டும்.
இதுகுறித்து வீட்டில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே மழைக்காலங்களில் மின் நுகர்வோர் மின உபயோகத்தை மிகவும் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu