நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள்- வானொலி பண்ணைப் பள்ளி வகுப்பு நவம்பா் 18-ல் தொடக்கம்
Tirupur News- நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக சாா்பில் ‘உற்பத்தியைப் பெருக்கும் நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள்’ எனும் தலைப்பில் வானொலி பண்ணைப் பள்ளி வகுப்பு நவம்பா் 18-ம் தேதிமுதல் தொடங்குகிறது.
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;
திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி, ஆராய்ச்சி மையம், கோவை அகில இந்திய வானொலி சாா்பில் ‘உற்பத்தியைப் பெருக்கும் நாட்டுக்கோழி வளா்ப்பு முறைகள்’ எனும் தலைப்பில் வானொலி பண்ணைப் பள்ளி வகுப்புகள் நவம்பா் 18-ம் தேதி முதல் வாரந்தோறும் ஒரு வகுப்பு என 13 வகுப்புகள் நடைபெறவுள்ளன.
இதன் ஒரு பகுதியாக பயிற்சியின் இறுதியில் நேரடியாக பல்கலைக்கழக பேராசிரியா்களுடன் கலந்தாலோசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். மேலும், பயிற்சி கையேடு மற்றும் எழுதுகோல் வழங்கப்படும். இந்த பண்ணைப் பள்ளியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் நவம்பா் 17-ம் தேதி வரை ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பண்ணைப் பள்ளி வகுப்புகளுக்கான கட்டணத்தை இம்மையத்தின் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது இணைய வங்கி சேவை வழியாகவோ செலுத்தலாம். இணைய வழியில் கட்டணம் செலுத்தியவா்கள் அலுவலக மின்னஞ்சல் முகவரியில் உரிய பணப் பரிவா்த்தனை எண்ணுடன் தங்களுடைய பெயா், முழு முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகிய தகவல்களை சோ்த்து அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9443551869, 9442350740, 0421-2248524 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu