திருப்பூரில் செல்போனை மறந்து குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகள்
Tirupur News- விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- பொங்கல் விழா விளையாட்டுப்போட்டிகள், ஒற்றுமையுணர்வை ஏற்படுத்துவதோடு, வீடியோ கேம், 'டிவி', சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடப்பதில் இருந்து இளைய தலைமுறையினரை விடுவிக்க உதவுகிறது.
திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.நகர் வடக்கு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விழா நேற்றுமுன்தினமும், நேற்றும் நடந்தது. எஸ்.ஆர்.,நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பெரியவர், சிறியவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், ஸ்லோ சைக்கிள், சாக்கு ஓட்டம், கோலப்போட்டிகள், உரியடித்தல் உள்பட ஏராளமான போட்டிகளால், மைதானம் களைகட்டியது. கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பொங்கல் வைக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
முந்தைய காலத்தில், மரபு விளையாட்டுகள் அதிகம் விளையாடப்பட்டன. இதனால், ஒற்றுமையுணர்வும், வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையும் உருவானது.தற்போது இளைய சமுதாயம் மொபைல்போன்களில் வீடியோ கேம் விளையாடுவதிலும், சமூக வலைதளங்களைக் காண்பதிலும் அக்கறை காட்டுகிறது. இதனால், உடல், மன ஆரோக்கியம் சீர்கெடுகிறது.
பொங்கல் விளையாட்டு போட்டிகள் இதற்கு மாற்றுத்தீர்வாக அமைகின்றன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் த ங்கவேல், கவுரவு ஆலோசகர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu