திருப்பூரில் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா!

திருப்பூரில் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா!
X

Tirupur News,Tirupur News Today- உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது.

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பொங்கல் விழா மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளில் களைகட்டிய பொங்கல் விழா

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் பொங்கல் தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ணபிரசாத் தலைமை வகித்தாா். ஆலோசகா், இயக்குநா் ஜெ.மஞ்சுளா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் என்.லட்சுமி முன்னிலை வகித்தாா். விழாவையொட்டி, பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள் மண் பானையில் பொங்கலிட்டனா்.

தொடா்ந்து, முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வந்த மாணவிகள் மேளதாளத்துடன் கல்லூரி வளாகத்தில் வலம் வந்தனா். மேலும், பல்வேறு வகையான கோலங்கள் வரைந்து தங்களது திறமைகளை வெளிபடுத்தினா். பின்னா், வள்ளிக் கும்மி, தேவராட்டம், உறியடி, சலகெருது ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரிப் பேரவைத் தலைவா் பேராசிரியா் எஸ்.அறம், பேரவை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

ஏவிபி கல்லூரியில் பொங்கல் விழா

திருப்பூர்:தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வருகின்ற 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், திருப்பூரில் இயங்கி வரும் ஏ.வி.பி கல்லூரியில் இன்று (ஜன.12) பொங்கல் விழா நடைபெற்றது. மாணவிகள் வேட்டி அணிந்து பொங்கலைக் கொண்டாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

கல்லூரி மாணவிகள் பாரம்பரிய முறைப்படி மாவிளக்கு, முளைப்பாரி எடுத்துப் பொங்கல் வைத்துக் கொண்டாடினார்கள். இதில் ஏராளமான மாணவிகள் சேலை அணிந்து வந்து உற்சாகமாகப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். வழக்கமாக மாணவிகள் சேலை அணிந்து வந்து பொங்கல் கொண்டாடும் நிலையில் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள், வேஷ்டி அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள்.

பொங்கல் கொண்டாட்டம் குறித்து கல்லூரி மாணவியர் கூறுகையில்,

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கல்லூரி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த மிட்டாய் வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள், கலை திருவிழா என வெகு சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். ஆண்கள் மட்டும் தான் வேட்டிகளைக் கட்ட வேண்டும் என்பது இல்லை. ஆண் பெண் என அனைவரும் பாரம்பரிய உடையணிந்து பொங்கல் கொண்டாட வேண்டும், என தெரிவித்தனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாணவிகள் பொங்கல் வைத்துக் குலவையிட்டு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் கல்லூரியில் படிக்கின்ற 2500 மாணவிகள் பாரம்பரிய சேலை அணிந்து கலந்து கொண்டனர். கல்லூரி மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழுவாகப் பொங்கல் வைத்துக் குலவையிட்டனர்.

கல்லூரி மாணவிகள் கும்மி ஆட்டம், நாட்டுப்புற நடனம் ஆடி மகிழ்ந்தனர். பல்வேறு நாட்டுப்புறப் பாடல்களுக்கு மாணவிகள் குழு குழுவாக மைதானத்தில் ஆட்டம் பாட்டத்துடன் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


நகராட்சி பள்ளியில் பொங்கல் விழா

வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையம் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் என்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜெயந்தி, சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், பொங்கல் வைக்கப்பட்டு ஊா் மக்கள், பெற்றோா்கள், மாணவா்களுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியா் பயிற்றுநா்கள் மீனாட்சி, சுமதி, மெலிந்தா, பாலசுப்பிரமணி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று தை பொங்கல் வரலாறு குறித்து எடுத்துரைத்தனா்.

ஊா் பிரமுகா்கள் முருகானந்தம், சக்திகுமாா், குணசேகா், மணிமுத்து ஆகியோா் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினா். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் பாலசிவகுமாா், ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!