திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு
X

Tirupur News- திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது.

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் இன்று துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவ, மாணவியர் ஆர்வமாக மொழிப்பாடத் தேர்வை எழுதினர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர்;இன்று துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் தேர்வைக் கண்காணிக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகியது. மார்ச், 23 ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டு அன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகியது.மொத்தம் 92 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து, 325 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர், வழித்தட அலுவலர், பறக்கும் படையினர் உட்பட, ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.


தேர்வு மையம், தேர்வறைகளை துாய்மைப்படுத்தும் பணி மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. தேர்வறை மேஜைகளில் தேர்வர்களின் பதிவு எண்களை, ஆசிரியர்கள் ஒட்டினர். இன்று காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது. வினாத்தாள் படிக்க, விடைத்தாள் முகப்பு பக்கத்தை நிரப்ப, 15 நிமிடம் வழங்கப்பட்டது. காலை 10:15க்கு துவங்கும் தேர்வு மதியம் 1:15 வரை நடத்தப்பட்டது.

பறக்கும் படை தயார்

பொதுத்தேர்வில் முறைகேடுகளை செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிக்க, கலெக்டர் கிறிஸ்துராஜ், முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம் தலைமையில், ஆசிரியர்களை கொண்ட, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு சிறப்பு அதிகாரி ஆனந்தி தேர்வு பணிகளை மேற்பார்வை செய்ய உள்ளார். மொழித் தாள் தேர்வாக தமிழ் தேர்வு இன்று நடந்தது. தேர்வறைகளில் கூடுதல் கண்காணிப்பில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!