ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருப்பூரில் பொதுமக்கள் அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருப்பூரில் பொதுமக்கள் அஞ்சலி
X

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு திருப்பூரில், பொதுமக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tirupur News,Tirupur News Today- ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மொத்தம் 288 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம்புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்தியாவையே உலுக்கி விட்டது.

இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக இது, பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் கடந்த 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் இறந்தனர். அதற்கு இணையான விபத்து இப்போது ஒடிசாவில் ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோரமண்டல் ரயில் மூலம் சென்னை வர முன்பதிவு செய்திருந்தவர்கள் எண்ணிக்கை 869 பேர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, காயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்குமோ, என்ற அச்சம் மக்களிடையே நீடிக்கிறது. இது மிக முக்கிய ரயில் என்பதால் பலர் இதில் தினமும் பயணம் செய்வா். இங்கே முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்தவர்கள் விவரங்கள் கிடைக்கவில்லை என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். எனினும், இன்றைய நிலவரப்படி இதுவரை இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல் ரயில் விபத்து நடந்ததையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கான, இந்தியாவில் பல்வேறு இடங்களில், பொதுமக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில், பல இடங்களில் மக்கள் இன்று அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது வருத்தத்தை தெரிவித்தனர்.

திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், தொழில் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
business ai microsoft