உடுமலை வழியாக கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - 14ம் தேதி வரை இயக்கம்

உடுமலை வழியாக கோவை திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் - 14ம் தேதி வரை இயக்கம்
X

Tirupur News-  உடுமலை வழியாக திண்டுக்கல் -  கோவைக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம் (கோப்பு படம்) 

Tirupur News- தீபாவளி பண்டிகைக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ம் தேதி வரை உடுமலை வழியாக கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Tirupur News,Tirupur News Today- தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) முதல் 14-ம் தேதி வரை கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவு வசதியில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் கோவையில் காலை 9.20 மணிக்கு புறப்பட்டு போத்தனூருக்கு 9.31 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 9.52 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 10.13 மணிக்கும், கோமங்கலத்துக்கு 10.46 மணிக்கும், உடுமலைக்கு 11 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 11.09 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 11.14 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 11.22 மணிக்கும், பழனிக்கு 11.38 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 11.55 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 12.04 மணிக்கும், அக்கரைப்பட்டிக்கு 12.20 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1 மணிக்கும் சென்று சேரும்.

இதுபோல் திண்டுக்கல்லில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு அக்கரைப்பட்டிக்கு 2.11 மணிக்கும், ஒட்டன்சத்திரத்துக்கு 2.27 மணிக்கும், சத்தரப்பட்டிக்கு 2.36 மணிக்கும், பழனிக்கு 2.55 மணிக்கும், புஷ்பத்தூருக்கு 3.11 மணிக்கும், மடத்துக்குளத்துக்கு 3.18 மணிக்கும், மைவாடி ரோடுக்கு 3.24 மணிக்கும், உடுமலைக்கு 3.33 மணிக்கும், கோமங்கலத்துக்கு 3.47 மணிக்கும், பொள்ளாச்சிக்கு 4.18 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு 4.43 மணிக்கும், போத்தனூருக்கு மாலை 5.08 மணிக்கும், கோவைக்கு 5.30 மணிக்கும் சென்று சேரும். இந்த ரயிலில் 10 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story