கணவனை தீர்த்து கட்டிய 'பாசக்கார' மனைவி, குண்டர் சட்டத்தில் கைது.

கணவனை தீர்த்து கட்டிய பாசக்கார மனைவி, குண்டர் சட்டத்தில் கைது.
X

கணவனை தீர்த்து கட்டிய 'பாசக்கார' மனைவி, குண்டர் சட்டத்தில் கைது.

திருப்பூரில் கூலிப்படை மூலம், கணவனை கொலை செய்த மனைவி உட்பட ஏழு பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் பல்லடம் ரோடு, அருள்புரத்தை சேர்ந்தவர் கோபாலன், 38 இவரது மனைவி சுசீலா 34, இருவரும் அப்பகுதியில் உள்ள வெவ்வேறு பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், சுசீலாவுக்கு,வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த கோபாலன், சுசீலாவை கண்டித்துள்ளார்.

கடந்த மே மாதம் 4ம் தேதி அன்று மாலை, சின்னக்கரை பகுதியில், கோபாலன் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், சுசீலாவுடன் தொடர்பு வைத்திருந்த கள்ளக்காதலன் மாரீஸ் , கோபாலனை, கூலிப்படை மூலம், கொலை செய்தது தெரிய வந்தது.கொலைக்கு உடந்தையாக இருந்த கூலிப்படையை சேர்ந்த மதன்குமார்,மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் மற்றும் மாரீஸ், சுசீலா உள்ளிட்ட ஏழு பேரையும், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கலெக்டர் உத்தரவுபடி இவர்கள் ஏழு பேர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது.

Tags

Next Story
ai solutions for small business