ஓட்டுப்பதிவு மெஷின்கள் பெங்களூரு 'பயணம்'

ஓட்டுப்பதிவு மெஷின்கள் பெங்களூரு பயணம்
X

அதிகாரிகள் முன்னிலையில்,  ஓட்டுப்பதிவு மெஷின்கள்,  பெங்களூருவுக்கு அனுப்ப, வாகனத்தில் ஏற்றப்பட்டது. 

பல்லடத்தில் பழுதடைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பதிவு மெஷின்கள், பழுதை சரிசெய்வதற்காக, பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு மெஷின்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பழுதடைந்த நிலையில் உள்ள 68 மின்னணு மெஷின்கள் மற்றும் 60 மின்னணு கட்டுப்பாட்டு மெஷின்கள், 206 வி.வி.பேட் ஆகியவை பழுதுநீக்கி சரி செய்வதற்காக, பெங்களூரூவில் உள்ள 'பெல்' நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், தாசில்தார் நந்தகோபால், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் மற்றும் அனைத்து கட்சியினர் பார்வையிட்டனர்.

Next Story
ai solutions for small business