காற்று மாசுபாட்டை தவிர்க்க கிராம மக்கள் அதிரடி திட்டம்

காற்று மாசுபாட்டை தவிர்க்க கிராம மக்கள் அதிரடி திட்டம்
X

பணிக்கம்பட்டி கிராமத்தில் ஊர்மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்.

பல்லடத்தில் உள்ள கிராம மக்கள், காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, விழிப்புணர்வு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி கிராமத்தில், ஊர் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கூறியுள்ளதாவது: பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செயல்பட்டு வரும் 'சைசிங்' நிறுவனங்கள், காற்று மாசு ஏற்படுத்தும் தென்னை மட்டையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'சைசிங்' நிறுவனங்களில் தென்னை மட்டைகள் எரிக்கப்படுவதால் மிக அதிக அளவில் அடர்புகை ஏற்பட்டு சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்படுகிறது. தென்னை மட்டை கொண்டு வரும் வாகன உரிமையாளர்கள், 'சைசிங்' நிறுவனங்களுக்கு தென்னை மட்டை சப்ளை செய்வதை தவிர்த்து, காற்றுமாசு ஏற்படுவதை தவிர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இக்கட்டுப்பாடுகளை மீறினால், வாகனங்கள் போலீசில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அந்த பேனரில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil