கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிறைவு விழா

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிறைவு விழா
X

கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத நிறைவு விழாவில் பங்கேற்ற சிறுவர்-சிறுமியர் 

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் மார்கழி மாத நிறைவு விழா நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் மார்கழி மாத நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு, சிறுவர் சிறுமியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்டாள் மற்றும் கிருஷ்ணர் வேடம் அணிந்தபடி பங்கேற்ற சிறுவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல், பாகவத கதைகள், வினாடி வினா நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மதுரை காயத்ரி நாராயணா சபா நிறுவனர் கவிஞர் கூடல் ராகவன், சிறுவர் சிறுமியருக்கு பரிசு, சான்றுகள் வழங்கினார். கோவில் அறங்காவலர் வெங்கடாசல ராமானுஜ தாசன் முன்னிலை வகித்தார். 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் பங்கேற்றனர். அனைவருக்கும் திருப்பாவை பயிற்சி வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை