பல்லடத்தில் சுகாதாரமற்ற தின்பண்டம்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல்
பல்லடத்தில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஓட்டல்களில் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடத்தில், கெட்டுப்போன காளான் மற்றும் தின்பண்டங்களை, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அழித்தனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயராஜா, ரவி, கேசவராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்லடம், பொங்கலுார் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பேக்கரி, டீக்கடைகள், மளிகை மற்றும் ஓட்டல்கள் என, 19 கடைகளில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போன காளான்கள், 5 கிலோ, பன், கேக் உள்ளிட்டவை, 4.5 கிலோ, துரித உணவுக்காக ஏற்கனவே, தயாரித்து வைக்கப்பட்டிருந்த வேக வைத்த உணவு பண்டங்கள், 2.5 கிலோ, லேபிள் இல்லாத உணவு பொருட்கள், 1.5 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டனன. அவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்கள் விற்பனை செய்த, கடை உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu