பல்லடத்தில், பால் பாக்கெட்டுகளை திருடி விற்ற இருவர் கைது
Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில், பால் பாக்கெட்டுகளை திருடி விற்ற இருவர் கைது. (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பால் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த கௌதம் (வயது34) சூப்பர்வைசராக பணி செய்து வந்தார்.
இந்நிலையில், பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர். இதன் ஓட்டுநராக பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது41) பணி செய்து வந்தார். இந்நிலையில், கௌதம். செந்தில் குமார் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பால் நிறுவனத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று, விற்பனை செய்து வந்தனர்.
இதற்கிடையே நேற்று சரக்கு வேனில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்களை நிறுவன மேலாளர் சகாயபாபு ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட அளவைவிட பால் பாக்கெட்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது, விசாரணையில் இருவரும் பால் பாக்கெட்களை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுவரை, ஏராளமாக இவர்கள் பால் பாக்கெட்டுகளை திருடியிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பல்லடம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, பால் பாக்கெட்டுகள் திருட்டு குறித்து மேலாளர் சகாய பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பால் பாக்கெட்டுகளை திருடி விற்றதாக, இருவர் கைது செய்யப்பட்டிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu