/* */

சிமெண்ட் ஆலைக்கு பயணித்த 6 டன் குப்பை

பல்லடம் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிமெண்ட் ஆலைக்கு பயணித்த 6 டன் குப்பை
X

பைல் படம்.

பல்லடம் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகி வருகிறது. இதற்கிடையே பல்லடத்தில் தினமும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனியாக பிரித்து எடுக்கப்படுகின்றன.

அப்படி பிரிக்கப்பட்டு தனியே சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை, நவீன எந்திரம் மூலம் அழுத்தம் கொடுத்து, பண்டல்களாக மாற்றி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட 6 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூர் சிமெண்டு தயாரிப்பு ஆலைக்கு லாரி மூலம் அனுப் பப்பட்டது. இதனை நகராட்சி ஆணையாளர் விநாயகம், சுகாதார ஆய்வாளர் சங்கர் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

Updated On: 29 March 2022 12:30 PM GMT

Related News