பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்; 197 லைசென்ஸ் ரத்து

பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்; 197 லைசென்ஸ் ரத்து
X

Tirupur News- பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறலுக்காக 197 லைசென்ஸ் ரத்து (கோப்பு படம்)

Tirupur News- பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம் என மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் வாகன பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பிரதான ரோடுகள் மற்றும் மத்திய பகுதிகளில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமீறல்கள் காரணமாக, விபத்துகள் நடக்கின்றன. ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்குதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னலை அலட்சியப்படுத்துதல், சீட் பெல்ட் அணியாதது, அதிக பாரம் ஏற்றிச் செல்லுதல் என பல விதிமீறல்களால் நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. விபத்துகளுக்கும் காரணமாகிறது. எனவே, முக்கிய நகரங்களில் அடிக்கடி வாகன சோதனைகளை நடத்தி, விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும், தொடர் விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

பல்லடம் டி.எஸ்.பி. விஜயகுமாா் மேற்பாா்வையில் பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு மற்றும் போலீஸாா் பல்லடம் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த நவம்பா் மாதத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற 202 போ், மதுபோதையில் வாகனங்களில் சென்ற 41 போ், சிக்னலை மதிக்காமல் சென்றவா்கள், நான்குசக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவா்கள், அதிக பாரம் ஏற்றிச் சென்றது உள்பட பல்வேறு விதமான போக்குவரத்து விதிகளை மீறிய 958 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக திருப்பூா் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டு 197 நபா்களின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டது என போக்குவரத்து போலீஸாா் தெரிவித்தனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!