தடகளத்தில் தடம் பதித்த மூத்தோருக்கு பாராட்டு விழா

தடகளத்தில் தடம் பதித்த மூத்தோருக்கு பாராட்டு விழா
X

தடகள போட்டியில் பங்கேற்றவர்கள்.

தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற மூத்தோருக்கு, பல்லடத்தில் பாராட்டு விழா நடந்தது.

திருப்பூரில், மாவட்ட அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் சமீபத்தில் நடந்தது. இதில், பல்லடத்தை சேர்ந்த பலர் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவ்வகையில், 400, 800, மற்றும் 1,500 மீ., ஓட்டப் போட்டியில், ஷேக்மத்துாம், முதலிடம் பிடித்தார். 5 கி.மீ., நடைப்போட்டியில், வேலுசாமி, சுரேஷ்குமார் ஆகியோரும், 5 ஆயிரம் மீ., ஓட்டப்போட்டியில், தங்கராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

குண்டு எறிதல் போட்டியில், கண்ணன், முதலிடம் பெற்றார். கணேஷ் என்பவர் 100, 200, மற்றும் 100 மீ., தடை ஓட்டத்திலும், சந்திரமல்லு என்பவர், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றனர். பழனிசாமி என்பவர், 200 மீ., ஓட்டப்போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.

நாகரத்தினம் என்பவர் ஈட்டி எறிதலில் முதலிடமும், 100 மீ., ஓட்டத்தில் இரண்டாம் இடம், பத்மாவதி என்பவர் நடைப்போட்டி, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். கிருஷ்ணமூர்த்தி என்பவர், 400 மீ., ஓட்டத்தில் முதலிடம், 200 மற்றும் 800 மீ., ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார்.

மணிவண்ணன் என்பவர் 100 மீ., ஓட்டம், மற்றும் நீளம் தாண்டுதலில் இரண்டாம் இடமும், குண்டு எறிதலில் மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பல்லடம் அறம் அறக்கட்டளை, பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவின் சார்பில், பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story