காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
X

Tirupur News. Tirupur News Today- குடிநீர் கேட்டு, சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள். 

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Tirupur News. Tirupur News Today- பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை அடுத்த பொள்ளாச்சி சாலையில் சின்னூர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 20 நாட்களாக அத்திக்கடவு குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னூர் பிரிவு அருகே பொள்ளாச்சி சாலையில் இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து அந்த இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பல்லடம் ஒன்றிய ஆணையாளர் மகேஸ்வரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். இதில் அத்திக்கடவு குடிநீர் வாரம் ஒரு முறை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும், இனிமேல் இதுபோன்று பிரச்சினைகள் வராமல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா?

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல பகுதிகளில், குடிநீர் பற்றாக்குறை என்ற பிரச்னை நீடிக்கிறது. குறிப்பாக நகரம் சார்ந்த அதை சுற்றியுள்ள பகுதிகளில், மக்களின் தேவைக்கேற்ப குடிநீர் வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை. பல பகுதிகளில், வீடுகளுக்கு குடிநீர் இணைப்போ அல்லது தெருவோர குடிநீர் குழாய் வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அருகில் உள்ள பகுதிகளுக்கு, மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு வாகனங்களில் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையே, இன்னும் நீடிக்கிறது. நகர்புறங்களில், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு, வீட்டு உரிமையாளர்கள் தரப்பில், குடங்கள் எண்ணிக்கையில் குடிநீர் வழங்கப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சி தரப்பில், இதுபோல் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு, குடிநீர் விநியோக வசதியற்ற பகுதிகளுக்கு லாரிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அதுவும், பல வேளைகளில் போதுமானதாக இருப்பதில்லை. இப்போது, கோடை காலமாக இருப்பதால் பொதுவாகவே, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்பது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மாவட்டம் முழுவதும் இதுபோன்று சாலைமறியல் போராட்டங்கள் நடப்பதை தடுக்க, அதிகாரிகள் தரப்பில் அக்கறை காட்டி முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!