பல்லடத்தில், பஸ்சில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து ஜூஸ் கொடுத்த பெண்களால் பரபரப்பு

பல்லடத்தில், பஸ்சில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து ஜூஸ் கொடுத்த பெண்களால் பரபரப்பு
X

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில், பஸ்சில் குழந்தைகளுக்கு மயக்க மருந்து ஜூஸ் கொடுத்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது. (கோப்பு படம்) 

Tirupur News. Tirupur News Today- பல்லடத்தில் பஸ்சில், மயக்க ஜூஸ் குடித்த குழந்தைகள் மயக்கமடைந்தனர். திருடும் நோக்கத்தில், ஜூஸ் கொடுத்த பெண்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Tirupur News. Tirupur News Today- கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார். அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர். நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனியும் ஏமாறலாமா?

மயக்க பிஸ்கட், மயக்க ஜூஸ் போன்றவை கொடுத்து பஸ்சில், ரயிலில், சினிமா தியேட்டர்களில் நகை, பணத்தை லவட்டும் கும்பல், இன்னும் இருக்கவே செய்கின்றனர். அதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல், ‘நன்றாக பேசுகின்றனர், சகஜமாக பழகுகின்றனர்’ என்ற அடிப்படையில் யார் எது தந்தாலும், யதார்த்தமாக வாங்கி சாப்பிட்டால், அடுத்த சில நிமிடங்களில் சுய நினைவை இழந்து, மயங்கிய நிலையில் இருக்கும் அவர்களிடம் உள்ள பணம், நகை, மொபைல் போன்களை அபேஸ் செய்துவிட்டு, அவர்களும் எஸ்கேப் ஆகி விடுவர்.

பலரும் இதுபோல் ஏமாந்ததை செய்திகளாக, தகவல்களாக, நண்பர்கள், உறவினர்களுக்கு நடந்துள்ளதை தெரிந்த பிறகும், இப்படி ஏமாறுவது, நமது குற்றம்தான். இனியாவது, இதுபற்றிய முழு விழிப்புணர்வுடன் இருப்பது மிக முக்கியம். நல்லவர்கள், திருடர்கள் என்பதெல்லாம், முகங்களை பார்த்து மட்டுமே மனிதர்கள் உடனடியான ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. எனவே, இனியாவது உஷாராக இருப்பது மிக மிக முக்கியம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!