மனைவியை மீட்டுத்தர 'டவர்' மீது ஏறி போராட்டம்

மனைவியை மீட்டுத்தர டவர் மீது ஏறி போராட்டம்
X
மனைவியை மீட்டுத்தரக்கோரி, மொபைல் போன் டவர் மீது ஏறி நின்று, இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் 100 அடி உயரமுள்ள செல்போன் டவர் உள்ளது. அதன் மீது ஏறிய ஒரு இளைஞர், மாயமான தனது மனைவியை மீட்டுத் தரவேண்டும். இல்லாவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார், அந்த இளைஞரை சமாதானப்படுத்தி கீழே வரச் செய்தனர்.

விசாரணையில், அவர் ஈரோடு பகுதியை சேர்ந்த அருளரசன், (28). கடந்த, 3 மாதங்களுக்கு முன், பல்லடம் மகாலட்சுமி நகரில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 'பொங்கல் பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு வந்த மனைவியை காணவில்லை எனவும், அவரது உறவினர்கள் கடத்திச் சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக, அவரது மனைவி, மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாக, அந்த இளைஞர் தெரிவித்தார். இதுகுறித்து, அருளரசன் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் தான் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!