பல்லடம்; மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா

பல்லடம்; மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா
X

Tirupur News- ஐவா் பூப்பந்தாட்டப் போட்டியில் கோவையைச் சேர்ந்த என்.ஆா்.பி.சி. அணி வெற்றி பெற்றது.  

Tirupur News-மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பு விழா, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.

Tirupur News,Tirupur News Today- மாநில அளவிலான ஐவா் பூப்பந்தாட்டப் போட்டிக்கான பரிசளிப்பு விழா பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

பல்லடம் தமிழ்ச் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன் தலைமை வகித்தாா். ரெயின்போ ரோட்டரி சங்கப் பட்டயத் தலைவா் தங்கலட்சுமி நடராஜன், முன்னாள் கூட்டுறவு வங்கித் தலைவா் பானு பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பூப்பந்தாட்டக் குழுவின் தலைவா் சாகுல் அமீது வரவேற்றாா். போட்டியில் முதல் இடம் பிடித்த கோவை என்.ஆா்.பி.சி. அணிக்கு பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா் பரிசு, கோப்பையை வழங்கினாா்.

இரண்டாம் இடம் பிடித்த பொள்ளாச்சி எஸ்.டி.சி. அணிக்கும், மூன்றாம் இடம் பிடித்த கோவை பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரி அணிக்கும், நான்காம் இடம் பிடித்த திருப்பூா் ஹிமாலயா அணிக்கும் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அ.ம.மு.க. மாவட்டச் செயலாளா் ஆனந்தகுமாா், நகரச் செயலாளா் யவன கதிரவன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எம்.நடராஜன், பல்லடம் அறம் அறக்கட்டளை நிா்வாகிகள் பகவான் துரைராஜ், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலகிருஷ்ணன், சௌந்தரராஜன், சசிரேகா ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். செயலாளா் ஷேக் மக்தூம், துணைத் தலைவா் சுரேஷ்கண்ணன் ஆகியோா் நன்றி கூறினா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!