பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
X

ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. 

பல்லடம் அருகே ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

பல்லடம் பகுதியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ப.வடுகபாளையம்புதுார் ஊராட்சியில், கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் விஜயலட்சுமி, முன்னாள் உதவி மருத்துவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், 35க்கும் அதிகமான கால்நடை விவசாயிகள் பங்கேற்றனர். 136 மாடுகள் மற்றும் ஆடுகள், கோழிகள் ஆகியவற்றுக்கு சிகிச்சைகள், பரிசோதனைகள் நடந்தன. கால்நடைகளை தாக்கும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அரசு திட்டங்களில் இணைந்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரித்து வரும் ஐந்து விவசாயிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story